கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவரான கிறிஸ்டியன்ஸ் ரத்ன கிருபா என்பவரது வீட்டிற்கு தமிழக காவல்துறையைச் சேர்ந்த போலீஸ் ஒருவர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக சென்றுள்ளார். அப்போது அந்த போலீசாரிடம் டீ அல்லது காஃபி சாப்பிடுகிறாரா என கிருபா கேட்டுள்ளார். அதற்கு அந்த போலீஸ்காரர் உடனடியாக மறுத்துள்ளார். மேலும், கிருபா குடும்பத்தினர் உணவு உட்கொள்ளும் பாத்திரத்தில் தான் சாப்பிட மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த போலீஸ்காரர் பெண் மருத்துவர் கிருபாவிடம், நீங்கள் முஸ்லீம் தானே? என்று கேட்டுள்ளார். இதனிடையே, கிருபாவின் மாமியார் போலீஸ்காரருக்கு அவர்கள் குடிக்காத ஒரு கண்ணாடி பாட்டிலில் கொஞ்சம் ஸ்லைஸ் கொடுத்துள்ளார். அதனை கொஞ்சமாக குடித்த போலீஸ்காரர், மீதம் இருந்ததை கிருபா கணவரின் சகோதரரை குடிக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் கிருபா இதுபற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், இதுதான் நான் முதன்முதலில் மதத்தின் பெயரால் பாகுபாட்டை எதிர்கொண்ட அனுபவம். தென்னிந்தியா என்னை அதிகமாக அரவணைத்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை வடக்கு தான் உண்மையில் காட்டுகிறது." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்தவரான பெண் மருத்துவர் கிறிஸ்டியன்ஸ் ரத்ன கிருபா முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று பெருமூச்சு விட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“