Pollachi Jayaraman Vs Udhiyanithi Stalin : தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை எதிர்கொண்டுள்ள தயாராக இருப்பதாகவும், அவர் மீது வழங்கிற்கு எதிராக நான் எந்த ஒரு அறிக்கையும் வெளியிட மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மாதம் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் துணை சபாநாயகர் வி ஜெயராமன் மீது பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில், துணை சபாநாயகர் மகனுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் உதயநிதியின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அநத மனுவில், உதயநிதி தன் மீது ஆதாரமல்லாத குற்றச்சாட்டுகளை கூறி சமுதாயத்தில் எனக்கு இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார். மேலும் எதிர்காலத்தில் உதயநிதி இது போன்ற கருத்துக்களை கூறாமல் இருக்கவும், அவரின் கருத்துக்களை ஒளிபரப்பியதற்காகவும் உதயநிதியிடமிருந்தும், கலைஞர் டிவியிடமிருந்தும் ரூ .1 கோடி இழப்பீடு வழங்க ஆணையிடவேண்டும் என்றும், எதிர்காலத்தில் உதயநிதி இதுபோன்ற கருத்தக்களை கூறுவதை தடுக்கும் வகையில், நிரந்தரத் தடை உத்தரவையும் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஜெயராமனையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களையோ ஒரு குற்றவாளியாக சிபிஐ குறிப்பிடவில்லை. ஆனால் உதயநிதி ஏன் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூற வேண்டும்? இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, அதுவரை அவரையோ அவரது குடும்பத்தினரையோ பொள்ளாச்சி வழக்கில் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்று அறிவித்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை, மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிபதியின் இந்த உத்தரவுக்கு உதயநிதி தரப்பு வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19-வயது இளம்பெண், நான்கு வாலிபர்கள் ஒரு காரில் தனது ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றிவிட்டு, தன்னை வீடியோ எடுத்ததாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த வழக்கில், ஒரு பெரிய பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் மோசடியை நடைபெற்றதை கண்டறிந்தனர். மேலும் இந்த விவகாராத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக அருளாநந்தம் (34), ஹெரான் பால் (29), பாபு (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"