Tamil Nadu Electricity Minister v senthil balaj Tamil News: தமிழகத்தில் அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 இலவச யூனிட்கள் உட்பட மானியம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் 6 தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், ஆதார எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி.” என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, 24×7 செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட போது..
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) November 18, 2022
12,62,407 (99%) புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. pic.twitter.com/6oUA9mDiCm
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil