2 மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் திரும்பும்.. ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் ரிப்போர்ட்!

வேறொரு கணக்கீட்டின்படி தமிழக பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும்

By: Updated: September 22, 2020, 11:36:23 AM

TN economy C. Rangarajan report : தமிழக பொருளாதார நிலை குறித்து பேசியுள்ள ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் “தமிழகத்தில் 2020-21க்கான பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் என கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொருளாதார மந்த நிலை அடைந்துள்ள நிலையில் விரைவில் அது சரியாகும் எனவும் ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் வரிவிகிதங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை என்றும், வேறொரு கணக்கீட்டின்படி தமிழக பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ழகத்தில் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததுடன், பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்துள்ளது தமிழ்நாடு.இந்நிலையில் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு துறை வல்லுனர்கள் கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சென்னை பொருளியல் பள்ளி தலைவருமான சி.ரங்கராஜன் செயல்பட்டார்.

நேற்றைய தினம், இந்த குழு பொருளாதார நிலைமையை சீரமைப்பதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன், “ தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த சரிவை சீரமைப்பு செய்யும் வகையில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளோம்.

தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை இன்னும் 2 மாதங்களில் மாறி விடும்.2020-21-ம் நிதியாண்டில் தமிழக பொருளாதார வளர்ச்சி 1.77 சதவீதமாக இருக்கும். சுகாதாரத்துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவிட பரிந்துரை செய்து இருக்கிறோம்.

மேலும் இலவச அரிசி வழங்குவதை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க கூறி இருக்கிறோம்” என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn economy will return again former rbi governor c rangarajan report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X