தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து அறிவித்துள்ளது.
ரூ.4000-க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்றும், ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்றும், ரூ.1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“