Tamil Nadu News: தமிழகத்தின் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட மின்சார கட்டணம் 2026-27ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. அந்த எதிர்ப்புகளை மீறி கருத்து கணிப்பு நடத்தப்பட்டு இந்த கட்டண உயர்வை அமலாக்கத்திற்கு கொண்டுவந்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சாரம் தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு மின் கட்டணப்பிரிவு வழங்கக்கூடிய மின்சார மாணியமும் தொடர்கிறது.
இரு மாதங்களாக 200 முதல் 500 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு, ரூபாய். 27இலிருந்து ரூ.27.50 வரை வசூலிப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு மாதங்களில் பயன்படுத்திய மின்சாரத்திற்கு ரூ.55 சேர்த்து காட்டக்கூடிய நிலை வரும் நாட்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாதங்களாக 300 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய தொகை ரூ.72 ஆகவும், ரூ.55 சேர்த்து வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு மாதம் ரூ.1147, இரண்டு மாதங்களுக்கு ரூ.2905 பரிந்துரை செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை ஆணையருடைய பரிந்துரை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil