/tamil-ie/media/media_files/uploads/2023/08/Electrict-Meter.jpg)
ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தமிழக அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. அதில், "ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் உயத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பான செய்தி தற்போது 2024-ல் உயர்த்தப்பட்டது போல் பரப்பப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றும் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் மின்கட்டண உயர்வு.. ஷாக் அடிக்கும் பழைய செய்தி
— TN Fact Check (@tn_factcheck) June 11, 2024
Fact checked by FCU | @CMOTamilnadu@TNDIPRNEWShttps://t.co/suJCBFjCJlpic.twitter.com/pZ2FT51Cb8
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.