Advertisment

இ-பாஸ் விண்ணப்பம் செய்வது எப்படி? 5 முக்கிய டிப்ஸ்கள் இங்கே

திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கி தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் வாகன அனுமதி சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இ-பாஸ் விண்ணப்பம் செய்வது எப்படி? 5 முக்கிய டிப்ஸ்கள் இங்கே

சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆரஞ்சு, சிகப்பு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்ட மாவட்டங்களில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது.

Advertisment

எனவே, தளர்வுகள்  அறிவிக்கப்பட்ட  செயல்பாடுகளுக்கு தேவைப்படும் வாகன அனுமதி சீட்டு எவ்வாறு பெறுவது என்பதை காண்போம்.

குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் இ- பாஸ்:   மூன்றாவது பொது முடக்கநிலை காலத்தில் தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பகுதிகள் தவிர, ஆரஞ்ச், பச்சை,சிகப்பு நிற மாவட்டங்களில் இயங்க அனுமதிக்கப்பட்ட  குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள்  தங்கள் பணியாளர்களுக்கான இ- பாஸ் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொழில் நிறுவனங்கள், https://tnepass.tnega.org/#/user/pass  என்ற இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறையின் கீழ், நிறுவனங்கள் தங்கள் ஜிஎஸ்டி / ஆர்ஒசி  பதிவு சான்றிதழ் / உத்யோக் ஆதார் ஆகியவற்றை ஆதாரமாக பதிவேற்ற வேண்டும், மேலும் ஊழியர்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்களையும் பதிவேற்ற வேண்டும்.

எல்லா பாஸ்களிலும் க்யுஆர் குறியீடு இருக்கும். சென்னையில் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு மையத்தையும் அரசு அமைத்துள்ளது.  1-800-425-1333 என்ற கட்டணமில்லா எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தனிநபர்கள் விண்ணப்பிக்கும் முறை: திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கி தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து  மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக எந்த கொரோனா நோயாளியுடனும் தொடர்பில் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக, ஊரடங்கால்,  நீங்கள் சென்னையில் சிக்கிக் கொண்டீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் காரில் உங்கள்  சொந்த ஊருக்குச் செல்ல தற்போது இ- பாஸ் மூலம் அனுமதியளிக்க்ப்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயனர்கள் இ-வாகன அனுமதி சீட்டு பெற- இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பயனர்கள் இ-வாகன அனுமதிச் சீட்டு பெற – இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்ல பயனர்கள் இ-வாகன அனுமதிச் சீட்டு பெற – இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

யாருக்கெல்லாம் இ- பாஸ் தேவை இல்லை: 

அனைத்துப் பண்ணை நடவடிக்கைகள்,   அனைத்து சரக்குப் போக்குவரத்து

அனைத்து விதமான பொருட்களின் நகர்வு / சுமை வாகனம்

நெடுஞ்சாலை உணவு விடுதி (தாபா), வாகன பழுது பார்ப்பு நிலையம்,கடைகள் (அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகை மற்றும் குறு வணிகக் கடைகள்) மற்றும் வண்டிகள் ஆகிய நடவடிக்கைகளுக்கு அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?

விண்ணப்பதாரர் பயணம் செய்யும் தேதிகளை மட்டுமே குறிப்பிட

வேண்டும், தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால்,

விண்ணப்பதாரர் பெயரும் (Members Travelling) பயணம்

செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட   தவண்டும்

தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும், தவறும் பட்சத்தில்

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும்,

விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) குறுஞ்செய்தி மற்றும் (Email)

மின்னஞ்சல் அனுப்பப்படும் .

ePASS அங்கீகரிக்கப்பட்டதும் ePASS பதிவிறக்க

இணைப்புடன்  மற்றொரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

Corona Corona Virus Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment