மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசில் நிதியமைச்சராக இருப்பர் பழனிவேல் தியாகராஜன். அண்மையில் இவர் பேசியதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், “30 ஆயிரம் கோடியை முதல்வரின் மருமகன் சபரீசனும், மகன் உதயநிதியும் சம்பாதித்து விட்டனர். அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழிக்கின்றனர்” என இருந்தது.
Advertisment
இந்த ஆடியோ தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்த ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவுக்கு பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து உங்களில் ஒருவன் என மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், சிலர் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரை சிம்மக்கல்லில் திங்கள்கிழமை (மே 8) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயர் விடுபட்டுள்ளது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“