New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a494.jpg)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் துணைவியார் காலமானார். 67 வயது நிரம்பிய கண்ணாத்தாள் இன்று அவரது இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
Advertisment
சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் பொது முடக்கம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சீனிவாசன் இன்று சென்னையில் முகாமிட்டிருந்தார் . இவரின் மறைவு குறித்து அமைச்சருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உடனடியாக திண்டுக்கல் புறப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.