வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மரணம்

சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் பொது முடக்கம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சீனிவாசன் இன்று சென்னையில் முகாமிட்டிருந்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் துணைவியார் காலமானார். 67 வயது நிரம்பிய கண்ணாத்தாள் இன்று அவரது இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் பொது முடக்கம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சீனிவாசன் இன்று சென்னையில் முகாமிட்டிருந்தார்  .   இவரின் மறைவு குறித்து அமைச்சருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உடனடியாக  திண்டுக்கல் புறப்பட்டார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn forest minister dindugal srinivasan wife passes away

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express