முன்னாள் டி.ஜி.பி-யும் தாம்பரம் முன்னாள் காவல் ஆணையருமான ரவி, சென்னை சைபர் கிரைம் போலீசில் தமது புகைப்படத்தை வைத்து போலியான பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி கும்பல் மோசடி செய்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். தற்போது ஓய்வுபெற்றுள்ள டி.ஜி.பி ரவி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருடைய சமூக வலைதள பக்கத்தில் உடற்பயிற்சிகள் செய்வது தொடர்பாகவும், இளைஞர்களுக்கான கல்வி தொடர்பான அறிவுரை வீடியோக்களை பதிவிட்டும் வருகிறார்.
இந்நிலையில், ரவியின் நண்பர்கள் ஏராளமானோருக்கு போலி அக்கவுண்ட்டில் இருந்து ஃப்ரண்ட்ஸ் ரிக்வஸ்ட் அளித்து அவர்களிடம், ரவி பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், மிகவும் நன்றாக உள்ளதால் அதனை வாங்குமாறு பரிந்துரை செய்வது போன்றும் மெசேஜ் வந்துள்ளது. இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டி.ஜி.பி ரவி, உடனடியாக இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களின் கணக்கு விவரங்களை வைத்துக்கொண்டு பல மோசடி கும்பல் பல்வேறு மோசடியில் ஈடுபடுவதாகவும், தற்போது புதிய மோசடியாக பர்னிச்சர் பொருட்களை வாங்குவதற்கு பரிந்துரை செய்வது போன்று மோசடி அரங்கேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil