ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்று இருக்கும்போது ஏன் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆக கூடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கட்சியின் சாதனை விளக்க கூட்டம் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகபூப்பாளையும் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஜனநாயக நாடான இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற நிலை இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக வரக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமைப் பிரச்சினையை எழுப்பியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இருந்த பாஜகவை தமிழகம் நிராகரித்தது.
அப்போது "பெண்மணியா? மோடியா? நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது மக்கள் மக்கள் அம்மாவை (ஜெயலலிதா) தேர்வு செய்தார்கள்". தற்போது தமிழகத்தில் ரவுடிகள் அனைவரும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஃபார்ஸ்ட்புட் தலைவர்களை பாஜக உருவாக்கி வருகிறது.
ஏழைகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாநில அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி நடைமுறை அணுகுமுறையை கொண்டு வந்தார். ஆனால் இப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் தொடங்கிய இருக்கிறார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அனைவருக்கும் ரூ1000 கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது அனைவருக்கும் அல்வா கொடுத்துள்ளார்கள். அதிமுக அரசு அனைவருக்கும் பாரபட்சமின்றி மிக்சி கிரைண்டர் கொடுத்தது. அதேபோல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் பெறுகிறார்கள். எங்கள் மீது துரும்பை வீசினால் நாங்கள் தூணை வீசுவோம். அதிமக தேன்கூடு போன்றது கொட்டினால் தாங்கமாட்டீங்க என்று செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“