scorecardresearch

தமிழக அரசு பஸ் பயணிகளுக்கு மேலும் ஒரு ஷாக்: விரைவு ஏ.சி பஸ்களில் கட்டண சலுகை ரத்து

இந்தாண்டு கோடைகாலத்தில், ஏசி பேருந்துகளின் கட்டணம் ரூ. 50 முதல் 100 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn buses

வருகின்ற கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ‘லீன் கட்டண முறையை’ நீக்கியுள்ளது.

இதனால், வார நாட்களிலும் ஏசி மற்றும் செமி ஸ்லீப்பர் வசதிகள் கொண்ட பேருந்துகளில் ரூ.50இல் இருந்து ரூ.150 வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர், மதுரை, பெங்களூரு மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் ‘லீன் (நெகிழ்வுக்) கட்டண முறை’யை அரசு போக்குவரத்துத் துறை 2019ல் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தை அமல்படுத்தும், பயணிகளை ஈர்ப்பதற்காக வார நாட்களில் 10% முதல் 25% வரை பயணக்கட்டணம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.

மேலும், தற்போது ஜூன் 15 வரை ‘லீன் கட்டண முறை’ ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதாவது ஜூன் 15 வரை ஏ.சி. ஸ்லீப்பரில் சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணம் செய்ய 635க்கு பதிலாக 705 கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது கோடை விடுமுறைக்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதால், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் மாநகராட்சி, வரும் வாரங்களில், போதிய வருவாய் ஈட்ட முயற்சித்து வருவதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை எதிர்த்து, போக்குவரத்து ஆர்வலர் ஆர் ரெங்காச்சாரி, இது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பஸ்கள், அரசு போக்குவரத்துத் துறையின் அடிச்சுவடுகளை பின்பற்றும் என்றும் கூறினார். மறுபுறம், கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், பேருந்து சேவைகளின் தரம் மோசமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn government ac and semi sleeper buses fare to be increased by rs 50 to 150 summer season

Best of Express