50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து அனுமதி, ஆன்லைனில் டிக்கெட் கட்டணம்

பேருந்துகளில் ஏ.சி போடுவதை தவிர்க்கலாம். ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது.       

By: Updated: May 7, 2020, 02:37:34 PM

பொது முடக்கநிலை காலம் முடிந்த பின்பு பேருந்துகள் இயக்கப்படும் போது  பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், கூறப்பட்டுள்ள சில முக்கிய நெறிமுறைகள் இங்கே:

அரசு  பேருந்து கழகங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறை : 

 • 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும்.
 • பின்புற படிக்கட்டில் ஏறி முன்புற படிக்கட்டில் பயணிகளை இறக்க வேண்டும்.
 • டிரைவர் நடத்துனருக்கு கிருமிநாசினி, மாஸ்க் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்
 • தேவைப்படும் இடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவும்
 • ஒவ்வொரு பயணத்திற்கு பின்பும் பேருந்தை கிருமி நாசம் செய்ய வேண்டும்.

பயணிகள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறை :   

 • முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். இல்லதபட்சத்தில், பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்படும்.
 • குறிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் பேருந்தில் நிற்கவோ/ உட்காரவோ வேண்டும்.
 • பேருந்து நிலையத்திலும், பேருந்தில் ஏறும் போதும்/இறங்கும் போதும்  சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் ( குறைந்தது, 1.8 மீட்டர்  இடைவெளி)
 • பேருந்துகளில் ஏ.சி போடுவதை தவிர்க்கலாம். ஜன்னலை திறந்து வைப்பது நல்லது.

பேருந்து ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறை:   

 • பணிக்கு செல்வதற்கு முன்பு கட்டாயம் உடல் வெப்ப நிலை  சோதனை செய்யப்படும்
 • ஓட்டுனர்  இருக்கும் இடங்கள் வெளிப்படையான திரை மூலம் தனிமைப்படுத்தப்படும்.
 • முகக்கவசம் மற்றும் கையுறையை  கட்டாயம் அணிய வேண்டும்

நடத்துனர் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறை:

 • பணிக்கு செல்வதற்கு முன்பு கட்டாயம் உடல் வெப்ப நிலை  சோதனை செய்யப்படும்
 • முகக்கவசம் மற்றும் கையுறையை  கட்டாயம் அணிய வேண்டும்
 • கை சுத்திகரிப்பானை தங்கள் கையில் வைத்துக் கொள்ளலாம்.
 • கூட்டத்தை

பணிமனைகள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறை : 

 • 5 மீட்டர் இடைவெளியில் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும்.
 • கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்
 • பணிமனைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

 

பணப் பரிமாற்ற முறைகள்:   

சில்லரை பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும்.

மொபைல் பேமன்ட், க்யுஆர் பேமன்ட் மற்றும் பே.டிஎம், கூகுள் பே, ஜியோ பே போன்ற இ-பேமன்ட் மூலம் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn government bus transport after lockdown rules and regulations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X