10,000 ஒப்பந்த செவிலியர்கள்… ஊதிய உயர்வுக்கு தனித்தனியாக ஆவணங்கள் கோரும் தமிழக அரசு

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு நிகராக ஒப்பந்த செவிலியர்கள் பணி செய்கிறார்களா என மதிப்பீடு செய்ய அவர்களின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Nurses
நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு நிகராக ஒப்பந்த செவிலியர்கள் பணி செய்கிறார்களா என மதிப்பீடு செய்ய அவர்களின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர பணியில் உள்ள செவிலியர்களுக்கு இணையான பணியைச் செய்கிறார்களா? அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்ய தனிப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுத்து மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியதற்காக அப்போதைய சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷுக்கு எதிராக 2019-ம் ஆண்டில் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரிய செவிலியர்கள் அதிகாரமளித்தல் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி. ஆஷா அடங்கிய அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளை ஆராய்ந்த எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி. ஆஷா அடங்கிய அமர்வு, ஒப்பந்த செவிலியர்களின் குறைகளை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தனித்தனியாக என்ற அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது. ஒப்பந்த செவிலியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக தனிப்பட்ட பிரதிநிதித்துவங்களைப் பெறவும், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரதிநிதிகளின் அழைப்பை மேற்கொள்ளவும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஜனவரி 4, 2023-க்குள் இந்த நடைமுறையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்த செவிலியர்களிடமிருந்து தனிப்பட்ட எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுக்க தற்போதைய சுகாதாரத்துறை செயலர் பி. செந்தில்குமார் மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், டிசம்பர் 11-ம் தேதிக்குள் ஒரு அறிக்கையை கமிட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரச் செயலாளரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் வி.பி. ஹரி சுந்தரி, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர்களுக்கும், ஒப்பந்த செவிலியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவத்தையும், அவர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியைச் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் கேட்கும்படி தகவல் அனுப்பியிருந்தார்.

இருப்பினும், ஒப்பந்த செவிலியர்களுக்கோ அல்லது அவர்களது சங்கங்களுக்கோ தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்றும், ஆவணங்கள் மற்றும் ஒப்பீட்டு விவரங்களின் அடிப்படையில் தனிப்பட்ட எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவங்களை பரிசீலித்தால் போதுமானது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn government calls to individual representations from 10000 contract nurses on pay increase

Exit mobile version