/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-22T133508.988.jpg)
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்கள் நிதியமைச்சரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நிதியமைச்சருடன் சந்திக்க இந்த வாரம் ஒருகூட்டம் கூட்டுவதாக உறுதியளித்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்கள் ஒரு பொதுவான நிலைக்கு வந்து, நிதியமைச்சரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் சங்கங்கள் தங்களது நீண்ட கால ஊதியம், பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக பொதுவான ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNGDA) மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) ஆகியவை பொதுவான குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நிதியமைச்சருடன் இந்த வாரம் ஒரு கூட்டத்தை கூட்டுவதாக உறுதியளித்துள்ளார்.
டைனமிக் அஷ்யூர்டு கேரியர் ப்ரோக்ரஷன் (டி.ஏ.சி.பி) மற்றும் காலக்கெடு ஊதியம் குறித்த அரசாணை 354-ஐ முறையாக அமல்படுத்துவது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், 2021-ல் வெளியிடப்பட்ட அரசு ஆணை 293-ஐ நடைமுறைப்படுத்துவது, மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது என்பது சங்கங்களிடையே சர்ச்சையாக மாறியது. இந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்க, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலர்களுடன், செப்டம்பர் 15ம் தேதி ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபை உறுப்பினரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான என். எழிலன் பங்கேற்றார்.
பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் சங்கம் (SDPGA), ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNGDA), தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம் (GADA) ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNGDA) மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
2017 முதல் நிலுவையில் உள்ள தற்போதைய 8, 15, 17 மற்றும் 20 ஆண்டுகளில் இருந்து பதவி உயர்வுகள் மற்றும் டி.ஏ.சி.பி/காலக்கெடு ஊதியம் தொடர்பான அரசாணை 35-4ஐ மறுஆய்வு செய்யக் கோரி சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றின. அரசாணை 293-ஐ முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன் செயல்படுத்த மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. “டி.ஏ.சி.பி-யின் முன்னேற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை” என்ற வாக்கியத்தை நீக்கவும், பற்றாக்குறை மற்றும் பற்றாக்குறை இல்லாத சிறப்புகளின் வகைப்படுத்தலை அகற்றவும் மற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கான கடினமான மற்றும் கடினம் அல்லாத பகுதிகளின் வகைப்படுத்தலை அகற்றவும் வலியுறுத்தி” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் (GADA) தலைவரும், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FOGDA) ஒருங்கிணைப்பாளருமான சி. சுந்தரேசன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNGDA) மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) ஆகியவை பொதுவான நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளன என்றார். மேலும், “நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொள்கை அளவில், டி.ஏ.சி.பி-இன் சுருக்கம் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், ஏதேனும் தீர்வு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்” என்றார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கே. செந்தில், நிதியமைச்சரை சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இந்த கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.
எஸ்.டி.பி.ஜி.ஏ-ன் செயலாளர் ஏ. ராமலிங்கம் கூறுகையில், “இந்த கூட்டத்தின் போது, அரசாணை 354-ஐ உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரினோம், அது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அப்போது 10,000 மருத்துவர்களுக்கு ஊதியம் மற்றும் பதவி உயர்வு கட்டமைப்பை வழங்கியது. அது இப்போது நீர்த்துப்போன வடிவில் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.