தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டதை (OPS) மீண்டும் அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.12ஆம் தேதி முதல் குழு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டால் 2ஆம் கட்ட தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
முதல்கட்டமாக 100 ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்தப் போராட்டத்தில் விருதுநகர், தர்மபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஊழியர்கள் கலந்துகொள்வார்கள்.
இரண்டாவது குழுவில் மதுரை, திருச்சி, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை 10 மணி வரை செப்.13ஆம் தேதி நடைபெறும்.
மூன்றாவது குழு உள்ள 100 நபர்கள் செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இதில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பங்கேற்கும்.
நான்காவது குழுவில் உள்ள தேனி, கரூர், ஈரோடு மாவட்ட அலுவலர்களும், 5ஆம் குழுவில் உள்ள சிவகங்கை, நீலகிரி, நாமக்கல் மற்றும் 6வது குழுவில் உள்ள தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஊழியர்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“