tn-government-identified-locations-for-six-new-medical-colleges-and-sanctions-600-crore : ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நமக்கல் ஆகிய இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பான முக்கிய சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனை அமையப்போகும் இடத்தையும், தேவைப்படும் முதற்கட்ட நிதியையும் அறிவித்திருக்கிறது.
Advertisment
தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மருத்துவத்தை மேம்படுத்துவம், மருத்துவர்களின் எண்ணிகையை அதிகரிக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் ஆறு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை நிறுவ முன் வந்தனர். மருத்துவமனை கட்டமைப்பிற்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதமும் பிரித்துக் கொள்ளும். இந்த ஆறு கல்லூரிகள் நிறுவப்பட்டால் 2021 ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 900 எம்பிபிஎஸ் சேர்க்கைகள் கூடுதலாக நடத்தப்படும். இதனால், அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
முதற்கட்டமாக , இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க இசைவு கொடுத்தது. மத்திய அரசும், இதற்காக 1,950 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisment
Advertisements
இந்நிலையில், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், புதியதாய் அமையவிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒத்துக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆறு மருத்துவமனைகள் அமையவிருக்கும் இடங்கள் பின்வருமாறு - விருதுநகரில் இருக்கும் கூரைக்குண்டு கிராமத்தில் 9 ஏக்கரிலும், திருப்பூர் நகரத்தில் 11.28 ஏக்கர் நிலத்திலும், ராமநாதபுரம் பட்டினபாக்கத்தில் 9 ஏக்கர் நிலத்திலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிலுவம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்திலும், உதகமண்டலத்தில் அமைந்திருக்கும் சிறு கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்திலும், திண்டுக்கல் அடியனூத்து கிராமத்தில் 8 ஏக்கர் நிலத்திலும் இந்த புதிய மருத்தவமனைகள் அமைக்கப்படுகின்றன.