”ஆளுநர் வரம்பை மீறுகிறார்; முதலமைச்சரோ மத்திய அரசுக்கு பயப்படுகிறார்”: ப.சிதம்பரம் சாடல்

ஆளுநர் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Coronavirus, Corona, P Chidambaram, Food Grains Stock
Coronavirus, Corona, P Chidambaram, Food Grains Stock

ஆளுநர் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகளையும், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அவர் இரு நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினார்.

இதற்கு, ஆளுநர் தன் வரம்புகளை மீறி செயல்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், “ஆளுநர் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்”, என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் பெயரளவிலான தலைமைதான் ஆளுநர் எனவும், அவர் உண்மையான தலைமை பதவி கிடையாது எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு பயந்து முதலமைச்சர் அமைதிகாப்பதால், ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை நேற்று (சனிக்கிழமை) அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn governor is exceeding his authority p chidhambaram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express