தமிழ்நாட்டில் ஆளும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நிலவிய வண்ணம் இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு பல சமயங்களில் போராட்டம், புறக்கணிப்பாக எதிரொலித்து இருக்கிறது.
இந்நிலையில், “தமிழ்நாடு பல்கலைக் கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளது என்றும், சுதந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.
பி.செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு பல்கலைக் கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளது. சுதந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை.
19 ஆம் நூ ற்றாண்டு மிகவும் சிறப்பானது என்றும், ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள், இங்கு சமூக நீதியை கடைபிடித்தார்கள். நமக்கு நல்லது செய்தார்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டும் வகையில் மாணவர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் கற்பிக்கப்படுகிறது.
கல்லூரி பாட புத்தகங்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய பாடங்கள் இல்லை. நமது விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள். வீரர்களின் வரலாற்றை மக்கள் நினைவில் இருந்து அழிக்க முயற்சிகள் நடக்கின்றன.
திருவள்ளுவர் மற்றும் ஷேக்ஸ்பியரை ஒப்பிட்டு சில அறிவாளிகள் புத்தகம் எழுதுவது எனக்கு வலிக்கிறது. திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வந்தவர். ஆனால், ஷேக்ஸ்பியர் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“