திருக்குறளின் ஆன்மீக பகுதியை அரசியலுக்காக சுருக்க கூடாது; ஆளுநர் ஆர்.என்.ரவி

திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது. அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும, நிர்பந்தங்களுக்காகவும் சுருக்க கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

TN governor RN Ravi says, Thirukkural spiritual part ignored by politics: திருக்குறளின் “ஆன்மீகப் பகுதி”, “அரசியலால்” புறக்கணிக்கப்படுகிறது என்றும், திருக்குறள் முழுவதுமாக ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும், அப்போது அது உலகின் உன்னதமான நிலையை அடையும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SKASC) குறள் மாலை சங்கம் நடத்திய சர்வதேச திருக்குறள் மாநாடு – 2022 இல் தமிழக ஆளுநர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய தமிழக ஆளுநர் ரவி, ‘தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மீக பூமி. இங்கு சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள். திருவள்ளுவர், விவேகானந்தா, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மீகம் மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர் என்று கூறினார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறளில் வரும் ஆதி பகவனும் ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஓன்றுதான். திருக்குறளில் “அகர முதல் எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து) என்று தொடங்கி ஆன்மீகம் அல்லது பக்தியைப் போற்றும் வரிகளைக் கொண்டிருந்தாலும், திருக்குறள் பெற்ற மொழிபெயர்ப்புகளில் ஆன்மீகக் குறிப்பு இல்லை என்று ஆளுநர் கூறினார்.

திருக்குறளை நெறிமுறைகள் மற்றும் அறநெறிகள் குறித்த ஒரு படைப்பாக சுருக்குவது அதற்கு பெரும் அநீதி என்று கூறிய ஆளுநர், திருக்குறள் தர்மத்தின் வேரூன்றியதாகவும் கூறினார்.

நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய திருக்குறள் அவற்றின் ஆன்மீக அர்த்தத்திலிருந்து தனியாக நிற்கவில்லை. அத்தகைய புரிதலும் பாராட்டும் இல்லாதது அந்த வரிகளின் உள் அர்த்தங்களை வெளிப்படுத்தாது என்று ஆளுநர் கூறினார்.

“திருக்குறள் பக்தியைப் பற்றி மட்டும் பேசவில்லை, துறவு மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியைப் பற்றியும் பேசுகிறது. திருக்குறள் கூர்மையாகவும், ஆழமான பொருளைக் கொண்டதாகவும் உள்ளன, அதை ஆன்மிகம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது,” என்றும் ஆளுநர் கூறினார்.

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றிய காலத்திலிருந்தே பல சித்தாந்தங்கள் வந்து மறைந்துள்ளன. அரசியல் அல்லது தற்போதைய சித்தாந்தம் திருக்குறளுக்கான உன்னத நிலையை வழங்குவதை சுருக்கக்கூடாது. அப்போதுதான் திருக்குறளின் பெருமை தொடரும். அதை விளம்பரப்படுத்த எந்த முயற்சியும் தேவையில்லை, என்றும் ஆளுநர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn governor rn ravi says thirukkural spiritual part ignored by politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express