திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டிற்கும் நேதாஜிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பாடப்புத்தகங்களில் கூட நேதாஜி குறித்து வரலாற்று குறிப்புகள் முழுமையாக இல்லை. இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையை தான் உருவாக்கினார்கள். குறிப்பாக ஜாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கினார்கள்.
ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக கூட முடிவதில்லை. அதையும் மீறி தேர்தெடுக்கப்பட்டாலும் அவரால் அந்த பதவியில் இருக்க முடிவதுல்லை. அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. இது போன்ற நிலை நாட்டில் மாற வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, திருச்சி வந்த ஆளுநரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
/indian-express-tamil/media/post_attachments/8c319f6d-ac9.jpg)
செய்தி:க.சண்முகவடிவேல்.