சித்தா பல்கலை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுனர்; விரைவில் பதில் அளிப்போம்: அமைச்சர் மா.சு

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதவை திருப்பிய அனுப்பிய ஆளுநர்; விரைவில் விளக்கங்களுடன் பதில் அனுப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சித்தா பல்கலை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுனர்; விரைவில் பதில் அளிப்போம்: அமைச்சர் மா.சு
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

TN Governor seeks clarifications on Siddha University bill: சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை விளக்கம் கேட்டு ஆளுநர் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சித்தாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2022 ஜூலை 29 அன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் அலுவலகம் திருப்பி அனுப்புவது குறித்து தமிழக அரசின் சட்டத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து விரிவான பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விளக்கங்கள் ஒரு வாரத்தில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் பதக்கம் அறிவிப்பு

மேலும், விளக்கங்களைப் பெற்ற பிறகு, ஆளுநர் மசோதாவின் ஒப்புதலை விரைவுபடுத்துவார் என்றும், தமிழகத்தில் சித்த மருத்துவம் மற்றும் பிற இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்த உதவுவார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய மருத்துவ முறைகளுக்கான இந்தப் பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதல் பல்கலைக்கழகமாக அமையும், என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த மசோதாவின்படி, கவர்னருக்குப் பதிலாக முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார். கவர்னர் அலுவலகம் இந்த மசோதாவின் அம்சம் குறித்து மட்டும் விளக்கம் கேட்டதா என்பதற்கு, பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்து அதிகம் விளக்கம் கேட்கப்பட்டதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சித்தா படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயம் என்பதால், ஆளுநர் அலுவலகம் அதுகுறித்து குறிப்பிட்ட விளக்கங்களை கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை ஜூன் 2, 2022 அன்று, கவர்னர் அலுவலகத்தில் சந்தித்து நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் கோரினார். மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா குறித்து முதல்வர் குறிப்பாக எடுத்துரைத்தார்.

இப்பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சென்னையை அடுத்த மாதவரத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கொள்கைக் குறிப்பில், அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவத்துக்கான அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையின் இணைப்பு வளாகத்தில் பல்கலைக்கழகம் தற்காலிகமாக அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn governor seeks clarifications on siddha university bill