Advertisment

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ -வுக்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
Oct 26, 2023 12:14 IST
New Update
 BJP MLA Vanathi Srinivasan

"பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Governor-rn-ravi | vanathi-srinivasan: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை வளைத்துப் பிடித்தனர். 

Advertisment

விசாரணையில் அந்த நபர் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பதும், அவர் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்தார். அவரைக் கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்  அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ -வுக்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை. ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும். பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Vanathi Srinivasan #Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment