Tn-government: பீக் ஹவர் கட்டணம் ஏற்கெனவே 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதத்தையும் குறைக்க வேண்டும், 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 12கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றது அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதில், மின் இணைப்பு 3B-ல் இருந்து 3A1 TARIFF-க்கு மாற்ற 12KW கீழுள்ள அனைத்து நிறுவனமும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
குடிசை மற்றும் மின் நுகர்வோர்க்கு மின் இணைப்பு 12KW TARIFF 3A(1) அளிக்கப்பட வேண்டும். மேலும், தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையிலேயே அமல்படுத்தவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“