சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அனுமதி; தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது பஸ் போக்குவரத்து 50% இறுக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

TN Govt allowed public bus transport in four districts, public bus transport allowed in chennai kanchipuram thiruvallur chengalpattu, பொது பேருந்து போக்குவரத்து அனுமதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மெட்ரோ ரயில் போக்குவரத்து அனுமதி, ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு, ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு, தமிழ்நாடு அரசு, ஊரடங்கு தளர்வுகள், metro train allowed, lockdown extended till june 28th, tamil nadu covid lockdown relaxation, chennai, tamil nadu, covid 19, beauty parlour allowed, saloon allowed

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது பஸ் போக்குவரத்து 50% இறுக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோன வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. அதனால், மீண்டும் முழு ஊரடங்கு மே 10ம் தேதி அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் தினசரி தொற்று 15 ஆயிரத்தை தாண்டியது. தீவிர நடவடிக்கைகள் காரணமாக தொற்று 500ஆக குறைந்துள்ளது. இதனால், தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது பஸ் போக்குவரத்து 50% இறுக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் 50% இறுக்கைகள் உடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, இந்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ நடைமுறையில்‌ இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌ என ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தொற்று
பரவலைத்‌ தடுக்கும்‌ பொருட்டு, அனைத்துக்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌, மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுடன்‌ தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின்‌ அடிப்படையில்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌
நடையுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்‌, இந்த ஊரடங்கு வரும்‌ 21-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, 19-6-2021 அன்று மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர் அலுவலர்களுடன்‌ நடத்தப்பட்ட ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்‌ அடிப்படையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த ஊரடங்கை
28-6-2021 காலை 6-00 மரி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்‌.

மேலும்‌, மாவட்டங்களில்‌ உள்ள நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌, மாவட்டங்கள்‌ பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 – (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 2 – (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி,
திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 3 – (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள்‌, வகை 1-ல்‌ உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

மேலும்‌, வகை 2-ல்‌ உள்ள 23 மாவட்டங்களில்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌,

கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது. உ தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00
மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ (hotels, restaurants and bakeries) பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

மின்‌ வணிகம்‌ (e-commerce)மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக
நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ (E-commerce) அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌.

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்கள்‌ விற்பனை செய்யும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களது கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காலணிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பணியாளர்‌ (Electricians) பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர் (Motor Technicians), தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌.

செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌.

திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில்‌, ஓட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படுவர்‌.

வீட்டு வசதி நிறுவனம்‌ (HCFs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (NBFCs), குறு நிதி நிறுவனங்கள்‌ (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலும்‌, வகை 3-ல்‌ உள்ள 4 மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ (Hotels, Restaurents and Bakeries)பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. மின்‌ வணிகம்‌ (e-Commerce) மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ (E-commerce) அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

குழந்தைகள்‌, சிறார்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌, முதியோர்‌, மனநலம்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, ஆதரவற்றவர்கள்‌, பெண்கள்‌, விதவைகள்‌ ஆகியோருக்கான இல்லங்கள்‌ மற்றும்‌ இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில்‌ பணிபுரிவோர்‌ இ-பதிவில்லாமல்‌ அனுமதிக்கப்படுவர்‌.

அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

அனைத்து அரசு அலுவலகங்கள்‌, 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌.

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ அனுமதிக்கப்படும்‌.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு
நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகளும்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டுநடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பணியாளர்‌ (Electricians), பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ (Motor Technicians) மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌.

மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்கள்‌ விற்பனை செய்யும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களது கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காலணிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

பாத்திரக்‌ கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்‌ பொருட்கள்‌, போட்டோ/ வீடியோ கடைகள்‌, சலவைக்‌ கடைகள்‌. தையல்‌ கடைகள்‌, அச்சகங்கள்‌, ஜெராக்ஸ்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தேநீர்க்‌ கடைகளில்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

சாலையோர உணவுக்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனு சாதனங்களின்‌ (Computer Hardware, Software, Electronic Appliances Spare parts) விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌.

பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

திரைப்படம்‌ மற்றும்‌ சின்னத்திரை படப்பிடிப்புகள்‌ 100 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரியும்‌ வகையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. படப்பிடிப்பில்‌ பங்கேற்றும்‌ பணியாளர்கள்‌ / கலைஞர்கள்‌ அவசியம்‌ கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

மாவட்டத்திற்குள்‌ பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி மெட்ரோ இரயில்‌ போக்குவரத்து, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவில்லாமல்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஓட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படுவர்‌.

வீட்டு வசதி நிறுவனம்‌ (48) வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (NBFCs), குறு நிதி நிறுவனங்கள்‌ (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

பொது

திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும்‌ 3-ல்‌ குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ்‌ பெற்று பயணம்‌ செய்ய அனுமதிக்கப்படும்‌. இதற்கான இ-பாஸ்‌ திருமணம்‌ நடைபெற உள்ள மாவட்டத்தின்‌ மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, திருமண நிகழ்வுகளில்‌ 5 நபர்கள்‌ மட்டும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்‌.

நீலகிரி மாவட்டம்‌, கொடைக்கானல்‌, ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம்‌ பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ்‌ பெற்று பயனரிக்க அனுமதிக்கப்படும்‌.

கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.” என்று அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt allowed public bus transport in four districts including chennai kanchipuram and metro train allowed

Next Story
மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது: அதிமுக நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?former AIADMK minister Manikandan arrested aiadmk ex minister manikandan arrested, அதிமுக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது, நடிகை சாந்தினி பாலியல் புகார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி, actress chandini sexual complaint, aiadmk, manikandan, actress chandini
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express