தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, தமிழக அரசு முதன்மை மற்றும் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
அதில் முதன்மைக் குழுவின் தலைவராக சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் பொது – மறு வாழ்வுத்துறையின் அரசு செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலராக மறுவாழ்வுத்துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனை குழு உறுப்பினர்கள் விவரம்
- களப்பணி அலுவலக தலைவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதர்
- கோவி.லெனின் - மூத்த பத்திரிக்கையாளர்
- முனைவர் கே.எம்.பாரிவேலன் மற்றும் முனைவர் க.ரா.இளம்பரிதி – கல்வியாளர்கள்
- மனுராஜ் சண்முகசுந்தரம் – அரசமைப்புச் சட்ட வல்லுநர்
- மூன்று அரசு சாரா அமைப்புகள்
அ. ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு
ஆ. அட்வெண்டிஸ்ட் மேம்பாடு மற்றும் நிவாரண முகமை
இ. ஜேசுட் அகதிகள் சேவை அமைப்பு
இலங்கை தமிழர் நலன் காக்க ஆலோசனை குழு அமைக்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருந்த நிலையில், தற்போது குழு உறுப்பினர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil