Advertisment

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு செயலர் நிலையில் இருந்து தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 TN GOVT announce five IAS officers promoted as additional chief secretaries Tamil News

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு செயலர் நிலையில் இருந்து தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா,  அபூர்வா ஆகிய 5 தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

இது குறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 1994ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான, வருவாய்த் துறை செயலராக உள்ள பி.அமுதா, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ள அதுல் ஆனந்த், மத்திய அரசுப்பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை கூடுதல் செயலராக உள்ள சுதீப் ஜெயின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக உள்ள காகர்லா உஷா, வேளாண் துறை செயலராக உள்ள அபூர்வா ஆகியோர், செயலர் நிலையில் இருந்து தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாகியுள்ளனர்.

இதையடுத்து, வருவாய்த் துறை செயலர், குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், வேளாண் துறை செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Govt Ias Official Ias Officer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment