தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை புதன்கிழமை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரைநாள் விடுமுறை என அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/10/29/Xk3dV7BsNjwhbrOQbdLh.jpg)
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் பணியின் நிமித்தம் குடும்பத்தினருடன் வசிப்பவர்கள், தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சீக்கிரமாக செல்ல, தீபாவளிக்கு முன் தினம் நாளை தமிழக அரசு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“