இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சனிக்கிழமை நவம்பர் 9-ம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை நாள் அரசு பொது விடுமுறை ஆகும். ஆனால், வெள்ளிக்கிழமை வேலைநாளாக இருந்ததால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பணிக்கு திரும்புவது கடினமாக இருக்கும் என்பதால், தமிழக அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி பள்ளி கல்லூரிகள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாக அறிவித்தது. மேலும், அக்டோபர் 30-ம் தேதி அரைநாள் விடுமுறையும் அறிவித்தது.
இதனால், அக்டோபர் 31 முதல் நவம்பர் 2-ம் தேதி வரி 4 நாள் விடுமுறையில் திபாவளியைக் கொண்டாடிவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சனிக்கிழமை (09-11-2024) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை என அறிவித்ததால், அந்த நாளை ஈடு செய்யும் விதமாக, சனிக்கிழமை (நவம்பர் 90 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சனிக்கிழமை (நவம்பர் 9) பள்ளிகள் முழுநேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“