Advertisment

அனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடு : அடுத்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்

TN Assembly Election 2021 : தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
அனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடு : அடுத்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்

TN Govt Announced Free Home Scheme For All : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு என பலக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவர், ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சயின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதில் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் என இரண்டு முறை ஆட்சியை தவறவிட்ட திமுக, இந்த முறை அரியனையை தன்வசப்படுத்த வேண்டும் என்று முழு மூச்சாக பணியாற்றி வருகிறது. மேலும் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  இதனால் திமுக இந்த தேர்தலில் நிச்சயமாக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் உற்றசாகமாக வேலை செய்து வருகின்றனர்.

மறுபுறம் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய அதிமுக 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி, ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் கடந்த மாதம் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளதால், அதிமுக ஒருவித நெருக்கடியில் இருந்தாலும், பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் வரும் தேர்தலில் வெற்றியை தக்கவைக்க தீவிரமாக செயல்பட்டு வரும் அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக மக்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்றும், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். விழுப்புரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர் “தமிழகத்திலே அதிமுக அரசு முதன் முறையாக கடல் நீரை குடிநீராக்கி கிராமப்புறங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் நகர மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அதிமுக அரசு, ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்த கொண்டு வந்துள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும், தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்” என உறுதியளித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ், விவசாய கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், அரசு ஊழியர்கள் வீடுகட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் 40 லட்சமாக உயர்வு என தமிழக அரசு மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டு்ளளது குறிப்பிடத்தகக்து.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamilnadu Assembly Tn Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment