வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகள் ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் மாத ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாத ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம் எனச் சொல்லப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்துக்கான சம்பளம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்துக்கான சம்பளம் ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இது மட்டுமின்றி 7 லட்சத்து 05 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கின்றனர்.
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வரும் ஏப்.1-ம் தேதி கிடைக்காது என்றும், வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகள் ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறை என்பதால் மார்ச் மாதத்துக்கான ஊதியம், ஓய்வூதியம் ஏப்ரல் 2-ம் தேதி வழங்கப்படும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.