Chennai-airport | kanchipuram: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக அரசு ஒப்புதல்
இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“