Tirunelveli | Kerala | தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் சட்டவிரோதமாக கொட்டப்படும் திடக்கழிவு மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளை, கேரள லாரிகள் மூலம் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகும் செலவை, கேரள அரசிடம் தமிழகம் கேட்டுள்ளது.
நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி ரோடு மற்றும் நாங்குநேரி பைபாஸ் ரோடு சர்வீஸ் ரோடுகளில் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து வெளியான செய்திகளை மேற்கோள்காட்டி, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இப்பிரச்னை குறித்து இரு மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
முன்னதாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், கேரளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 965 கிலோ கழிவுகள் கொட்டப்பட்டன. இதில் 20 கிலோ மருத்துவ கழிவுகள் ஆகும்.
இந்தக் கழிவுகளை அகற்ற ஆகும் செலவினை கேரள அரசிடம் பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கில் ஷாஜி, உடையார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கேரள அரசு அடுத்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“