Tamilnadu Government: சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியது. அந்த சிறுமிக்கு தற்போது சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி, தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பொது இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது, நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முககவசம் அணிவிக்க வேண்டும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“