த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்ததைத் தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்ணூரில் 1546 குடும்பங்கள், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெரியளவில் வளர்ச்சி பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரந்தூர் பகுதி நீர்நிலைகளை எந்த அளவில் சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.