தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் (யுஏஇ) இணைந்து பணியாற்ற தமிழக அரசு ஆர்வமாக இருப்பதாக புதன்கிழமை தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சென்னையில் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான சர்வதேச மாநாடு 'இன்வெஸ்டோபியா குளோபல்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ்நாட்டின் பலம் எலக்ட்ரானிக்ஸ், சோலார் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி, விண்வெளி தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் ஆகியவற்றில் உள்ளது. எங்கள் ஒத்துழைப்பை வலுப்பெற செய்ய இன்வெஸ்டோபியா போன்ற முன்முயற்சிகளை முன்னெடுக்க ஒரு பணிக்குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துகிறோம். முதலீட்டிற்கான மற்றொரு முக்கிய பகுதி. நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) ஆகும்.
SDG சாதனைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும், இந்தத் துறையில் முதலீடு இல்லாததைக் காண்கிறோம். நம் மாநிலத்தில் பல வாய்ப்புகள் இருப்பதால் இந்தத் துறையில் அதிக முதலீடு தேவைப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் மக்கள்-மக்கள் உறவுகள் மற்றொரு முக்கிய அம்சமாகும், இது இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக மையமாகவும், தரமான நேரடி முதலீடுகளின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்திய வணிகங்களின் வலுவான இருப்பைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்திய வணிகங்களுக்கு உகந்த சூழலை வழங்க ஐக்கிய அரபு எமிரேட் உறுதியளித்துள்ளது,” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“