அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு ஏன்? விளக்கம் கொடுத்த தமிழக அரசு

சென்னை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2,500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூ.3,0000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2,500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூ.3,0000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN Govt explain about chennai anakaputhur Adyar River encroachments demolition Tamil News

சென்னை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2,500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூ.3,0000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. வீடுகள், கட்டடங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு நடுவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர் 3-வது தெரு பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்திருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

Advertisment

ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அனகாபுத்தூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, வீடுகளை இடிக்கும் முடிவை கைவிடவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சென்னை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

Advertisment
Advertisements

இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம் ; 390 சதுர அடி)மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30000, மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. “ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: