மாநில மற்றும் மத்திய அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநில அரசு சுமார் 20,000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது’ நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை திறம்பட நிர்வகிக்க தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகமை (LAATAN) என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் தலைவராகவும், தொழில்கள், நீர்வளம், நெடுஞ்சாலைகள் மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகமையின் செயல்பாட்டை மேற்பார்வையிடவும், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. நில நிர்வாக ஆணையர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை குறிப்பில் அமைச்சர் கூறியதாவது:
”நிலம் கையகப்படுத்துதல் நிலையை அவ்வப்போது கண்காணித்தல், துறைகள்/ஏஜென்சிகளை ஒருங்கிணைத்தல், கையகப்படுத்துதலுக்கான நிதியைப் பெறுதல், பணியாளர்களை நிறுவுதல், கையகப்படுத்தும் நிலங்களுக்கான அசல் மனுக்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை, தமிழ்நாட்டின் நிலம் கையகப்படுத்தும் முகமை’ திறம்பட நிர்வகிக்கும்.
சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு; சென்னை வெளிவட்ட சாலை; சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம்; பல்வேறு நகரங்களுக்கு புறவழிச்சாலை; பாலங்கள் மீது சாலை/பாலங்களுக்கு அடியில் சாலை; மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“