ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000லிருந்து ரூ. 37,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2011ம் ஆண்டில் இருந்து செயல்படுத்திவருகிறது.
இப்புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹெம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தளங்களையும் உள்ளடக்கியது.
இத்திட்டத்தின் கீழ், அனைத்துப் பிரிவினர்களையும் உள்ளடக்கிய 500 முதல் 600 கிறித்தவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இத்திட்டத்தினை தமிழக சிறுபான்மையினர் நல இயக்ககம் செயல்படுத்தி வருகிறது.
தற்போது, ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ரூ. 20,000லிருந்து ரூ. 37,000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil