மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் – ரூ. 114 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

புத்தக வாசிப்பிலும், எழுத்திலும் தீராத ஆர்வம் கொண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2010-ல் சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற்றாண்டுநூலகத்தை திறந்துவைத்தார். அந்நூலகம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் அறிவு கூடாரமாக திகழ்கிறது.

இந்த வாய்ப்பு மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், மதுரையில் புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.99 கோடியும், நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின்நூல்கள், இணையவழிப் பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ரூ.10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.114 கோடி நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt issued go for madurai kalaignar library

Next Story
திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express