Advertisment

உயரும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; முதல் எச்சரிக்கையை விடுத்தது தமிழக அரசு

TN govt issues first warning to kerala for Mullaiperiyar dam level: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு; தமிழக அரசு சார்பில் முதல் எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
உயரும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; முதல் எச்சரிக்கையை விடுத்தது தமிழக அரசு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய பிறகு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் கேரளாவுக்கு நேற்று (சனிக்கிழமை) முதல் எச்சரிக்கையை விடுத்தார்.

Advertisment

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், சனிக்கிழமை காலை 7 மணிக்கு 135.50 அடியிலிருந்து நீர் மட்டம் உயர்ந்து, மாலை 6 மணிக்கு 136 அடியை எட்டியது. மாலை 7 மணிக்கு நீர் மட்டம் 136.20 அடியாகவும், இரவு 11 மணிக்கு நீர் மட்டம் 136.55 அடியாகவும் இருந்தது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் தமிழகம் 2,150 கன அடி தண்ணீர் எடுக்கும்போது, ​​அணைக்கான நீர்வரத்து 3,608 கன அடியாக உள்ளது.

சமீபத்தில், மத்திய நீர் ஆணையம் (CWC) முல்லைப் பெரியாறு வளைவு விதிக்கு (rule curve) ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 21-30 காலகட்டத்தில் வளைவு விதிப்படி, அணையின் உயர் கொள்ளளவு நிலை 137.75 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் பரிசீலித்து அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும் என்று தெரிய வந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச சேமிப்பு நிலை 142 அடி.

இந்நிலையில், இடுக்கி நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமை மாலை நீர்வரத்து சற்று அதிகரித்தது. நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் காலை 7 மணிக்கு 2,398.20 அடியில் இருந்து மாலை 3 மணிக்கு 2,398.16 அடியாக குறைந்தது. ஆனால் இரவு 7 மணியளவில் நீர்மட்டம் 2398.28 அடியாக உயர்ந்தது, இது மொத்த சேமிப்பில் 94.47% ஆகும். செருதோணி அணையின் 3 -வது எண் ஷட்டர் 40 செ.மீ அளவிற்கு திறந்திருந்தது. மூலமட்டம் மின்நிலையத்தில் மின் உற்பத்தி அதிகபட்ச அளவில் தொடர்ந்தது, வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி 14.718 மெகா யூனிட். மத்திய நீர் ஆணையம் அறிவித்த வளைவு விதி மட்டத்தின்படி அணை ஆரஞ்சு எச்சரிக்கை நிலையில் இருந்தது. வளைவு விதிப்படி, சிவப்பு எச்சரிக்கை நிலை 2,398.31 அடி, மற்றும் அதிகப்பட்ச நிலை 2,399.31 அடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mullaperiyar Dam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment