/indian-express-tamil/media/media_files/2025/10/06/gaza-peace-plan-2025-10-06-08-30-04.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலைமாமணி விருது விழா: சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 2021 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் எஸ்.ஜே சூர்யா, நடிகை சாய் பல்லவி, நடிகர் விக்ரம் பிரபு, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமி, அனிருத் உட்பட 90 பேருக்கு கலைமாமணி விருதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- Oct 13, 2025 07:28 IST
காஸா அமைதி ஒப்பந்தம்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எகிப்தில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 12, 2025 22:04 IST
சென்னையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
சென்னை - அண்ணாநகரில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கார்களில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் காரை இயக்கிய பிரசாந்த் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் பெண் தோழியுடன் மது அருந்திய பிரசாந்த், காரை பின்பக்கம் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து என தெரியவந்துள்ளது.
- Oct 12, 2025 21:09 IST
தனிப்பட்ட வருமானம் குறைவு - அமைச்சர் பதவியை கைவிடுவதாக சுரேஷ் கோபி பேச்சு
சமீபகாலமாக தனது தனிப்பட்ட வருமானம் குறைந்து வருவதால், அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக நடிகரும், எம்.பியுமான சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். திரைப்பட வாழ்க்கையை விட்டு ஒருபோதும் அமைச்சராக வேண்டும் என்று விரும்பியதில்லை என்றும் கூறியுள்ளார்.
- Oct 12, 2025 19:45 IST
பீகார் தேர்தல் - பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டி
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் தலா 101 தொகுதியில் போட்டியிடுகின்றன. சிராஜ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி 29 தொகுதியிலும், ஹிந்துஸ்தானி ஹாவா மொர்சா, ராஷ்ட்ரிய லோக் மொர்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
- Oct 12, 2025 19:42 IST
அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய அரசு மறுப்பதாக எஸ்.இ.சி குற்றச்சாட்டு
அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய அரசு மறுப்பதாக அமெரிக்காவின் எஸ்.இ.சி (SEC) ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் $250 மில்லியன் லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் நிதி திரட்டிய புகாரை எஸ்.இ.சி (SEC) விசாரித்து வருகிறது.
- Oct 12, 2025 18:12 IST
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வில் குளறுபடி?
நெல்லை - பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி? வேலூரை சேர்ந்தவர் வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பம் செய்த நிலையில் மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. "தேர்வர் விண்ணப்பித்த பாடத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மொழித்தாள் வழங்கப்பட்டது,"விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்தது தேர்வரின் தவறு" வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
- Oct 12, 2025 17:24 IST
இறந்தோரை வைத்து தவெக அற்ப அரசியல்: ஆர்.எஸ்.பாரதி
இறந்தோரைவைத்துஅற்பஅரசியல்செய்கிறதுத.வெ.க; அதற்குதுணைநிற்கிறதுஅதிமுக. அதிமுக, பாஜகவின்மறைமுகஉதவியைதவெகபெற்றுள்ளதுஇன்றுவெட்டவெளிச்சமாகியுள்ளது. நெரிசலில்இறந்தோர்குடும்பத்தைஅரசியல்நோக்கத்திற்காகமுறைகேடாகபயன்படுத்துகிறதுஎன்றுதிமுகஅமைப்புச்செயலாளர்ஆர்.எஸ். பாரதிகுற்றம்சாட்டியுள்ளார்.
- Oct 12, 2025 17:21 IST
பீகார் தேர்தல் - இரண்டாவது நாளாக பாஜக ஆலோசனை
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்கள் 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
- Oct 12, 2025 17:06 IST
திருமாவளவன் குழப்பத்தில் இருக்கிறார்: அண்ணாமலை
விஜய்அரசியலுக்குவந்தபின்திருமாவளவன்எண்ணஓட்டம்குழப்பத்தில்இருக்கிறது. எல்லாவற்றுக்குஆர்.எஸ்.எஸ், பாஜகஎனகூறும்திருமாவின்அரசியல்தரம்தாழ்ந்துமாறியிருக்கிறது. தவறுசெய்தபின்தப்பிக்கஆர்.எஸ்.எஸ், பாஜக, அண்ணாமலைஎனபழிபோடுவதைநிறுத்தவேண்டும்எனதமிழகபாஜகமுன்னாள்தலைவர்அண்ணாமலைதெரிவித்துள்ளார்.
- Oct 12, 2025 16:42 IST
தே.மு.தி.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
- Oct 12, 2025 16:09 IST
பாகிஸ்தானுடன் மோதல் ஏன்? ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர்கான் முக்தாக்கி விளக்கம்
பாகிஸ்தானுடன் மோதல் ஏன் என்று ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர்கான் முக்தாக்கி விளக்கம் அளித்துள்ளார். அதில், “பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பிறகு நாங்கள் தாக்குதலை தொடங்கினோம். பாகிஸ்தான் எதிரி அல்ல. ஆனால், சில பிரச்னைகளை உருவாக்குகின்றன.” என்று கூறினார்.
- Oct 12, 2025 15:58 IST
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்குத் தடை இல்லை: தாலிபான் வெளியுறவு அமைச்சர் தகவல்
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், அதற்குத் தாலிபான் அரசு எதிரானவர்கள் அல்ல என்றும் தாலிபான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெண் நிருபர்கள் (Journalists) மத்தியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய தாலிபான் வெளியுறவு அமைச்சர், "ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அதற்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல. சில பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 28 லட்சம் பெண்களும், 1 கோடி மாணவர்களும் ஆப்கானிஸ்தானில் படித்து வருகின்றனர்," என்று கூறினார்.
- Oct 12, 2025 15:09 IST
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பயங்கர மோதல்; 58 பாக் வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நடந்த பயங்கர மோதலில், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் படைகள் 25 பாகி்ஸ்தான் ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Oct 12, 2025 14:13 IST
தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் - தி.மு.க எம்.பி. ஆ.ராசா காட்டம்
தேர்தல் ஆணையத்திற்குள் திருடர்கள் புகுந்துவிட்டதால் கவனமாக இருக்க வேண்டும். 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா தெரிவித்தார்.
- Oct 12, 2025 13:52 IST
இப்படி ஒரு தலைவரை பார்த்ததில்லை -டிடிவி தினகரன் விமர்சனம்
தன்னுடைய கட்சித் தொண்டரிம் இன்னொரு கட்சிக் கொடியை கொடுத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க என்று மகிழ்ச்சி அடைந்த தலைவரை இதுவரை பார்த்ததில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குறித்து டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.
- Oct 12, 2025 13:22 IST
த.வெ.க-வினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கின்றனர்- இ.பி.எஸ்
அ.தி.மு.க கூட்டத்திற்கு த.வெ.க-வினர் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி
- Oct 12, 2025 12:47 IST
தவறான முடிவால் காங்கிரஸ் சரிவை சந்தித்தது- பா.சிதம்பரம்
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற தவறான முடிவால் காங்கிரஸ் கட்சி சரிவை சந்தித்தது. தங்கக் கோவிலை மீட்டெடுக்கும் விவகாரத்தில் செய்த தவறுக்கு விலையாக இந்திரா காந்தி தனது உயிரை கொலை நிலை ஏற்பட்டது என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
- Oct 12, 2025 12:30 IST
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் புகார்
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து, இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு நடவடிக்கையின் பேரில், பேராசிரியர் மாதவைய்யா பல்கலைக்கழக கிளையின் வளாகத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- Oct 12, 2025 12:26 IST
அதிமுகவின் அலங்கார தேவதை இ.பி.எஸ்: ராஜேந்திர பாலாஜி
ஒரு சாமானியன், ஒரு விவசாயி தமிழகத்தை ஆள்வதா? அதிமுகவுக்கு பொதுச் செயலாளராவது இருப்பதா? என பலர் வழக்கு மேல் வழக்கு போட்டார்கள்; நீதிமன்றம் சென்றார்கள்; தேர்தல் ஆணையத்திடம் சென்றார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும், மக்களின் அன்பும் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆகலாம் எனத் தீர்ப்பு வந்தது. இன்னும் அவரை ஒடுக்கிவிட வேண்டும், விரட்டிட வேண்டும் என நினைக்கின்றனர்; எல்லாவற்றையும் தகர்த்து மக்களைக் காப்பேன், தமிழகத்தை மீட்பேன் என வெற்றிப் பயணம் செய்து வருகிறார்.
பல சூழ்ச்சிகள், பலப் பிரச்சனைகள், உள்ளே இருந்து குழி பறிப்பது, வெளியில் இருந்து குழி பறிப்பது என அத்தனையையும் தகர்த்து எறிந்து அதிமுகவின் அலங்கார தேவதையாக இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி சூப்பர் ஸ்டாரோ, சுப்ரீம் ஸ்டாரோ கிடையாது; ஆனால், அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது; அவர் விவசாயியாகப் பிறந்தவர், கண்மாய் கரையில் விளையாடியவர்; இப்படிப்பட்டவர் மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்திருக்கிறார் என்றால், அதுதான் அவரது நேர்மை
- ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு
- Oct 12, 2025 12:01 IST
உலகத்தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம்- முதல்வர் பெருமிதம்
சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான். உலகத்தரத்தில் இந்தியாவின் முதல் வண்ணமீன்கள் வர்த்தக மையத்தை திறந்து வைத்தேன்.
சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 12, 2025
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; 2021-22-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன்; நேற்று - வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள… pic.twitter.com/GHqjL773sU - Oct 12, 2025 12:00 IST
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை அடுத்த திருப்போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மதுபோதையில் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டு, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இதேபோல மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானவர்
- Oct 12, 2025 11:56 IST
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியான உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த உரங்களைப் பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அன்புமணி ராமதாஸ்
- Oct 12, 2025 11:40 IST
யுபிஐ மூலம் கல்விக்கட்டணங்கள்: அனைத்து மாநில அரசுகளுக்கும் கல்வி அமைச்சகம் கடிதம்
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யுபிஐ மூலம் கல்விக்கட்டணங்கள் செலுத்துவதை ஊக்குவிக்க மாநில அரசுகள், என்.சி.இ.ஆர்.டி, சி.பி.எஸ்.இ,, கே.வி.எஸ். (NCERT, CBSE, KVS) உள்ளிட்ட அமைப்புகளுக்கு கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
பணம் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை, பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது போன்ற பல நன்மைகள் உள்ளதாகக் கடிதத்தில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 11:06 IST
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- அமைச்சர் சிவசங்கர்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்துத் துறையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தால் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
- Oct 12, 2025 11:01 IST
சபாநாயகர் அப்பாவு மகனுக்கு தி.மு.க.வில் பொறுப்பு
சபாநாயகர் அப்பாவு அவர்களின் மகனான அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அந்தப் பொறுப்பில் இருந்த கிரகாம் பெல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அலெக்ஸ் அப்பாவுக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 10:47 IST
ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ரவுடி நாகேந்திரன், சிகிச்சை பலனின்றி கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தற்போது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாகேந்திரனின் உடல் அஞ்சலிக்காக வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேணும் பொருட்டு, எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 10:46 IST
விஜய்க்கு அரசியலில் வழிகாட்ட சரியான ஆட்கள் இல்லை: அமீர்
விஜய்க்கு அரசியலில் வழிகாட்ட சரியான ஆட்கள் இல்லை; தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை அவர் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
- இயக்குநர் அமீர்
- Oct 12, 2025 10:26 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று முதல்(12-10-2025) வரும் அக்.18ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணித்துள்ளது.
- Oct 12, 2025 10:21 IST
அமெரிக்கா: பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
அமெரிக்காவின் வடக்கு மாகாணமான மிசிசிப்பியில் செயல்படும் பள்ளியின் மைதானத்துக்குள் புகுந்த 18 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டத்தில் மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டத்தில் படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Oct 12, 2025 10:19 IST
நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் ஒப்படைப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு மதியம் 2 மணிக்கு வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 09:30 IST
அலையில் சிக்கிய மாணவனின் சடலம் கரை ஒதுங்கியது
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நேற்று குளிக்கும் போது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவரின் சடலம், இன்று காலை பட்டினப்பாக்கம் பகுதியில் ஒதுங்கியது. மெட்ராஸ் பொருளாதாரக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் உ.பி.யைச் சேர்ந்த ரோஹித் சந்திரா (21) என்பவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அலையில் சிக்கிய மற்றொரு கவின் பிரசாந்த் என்ற மற்றொரு மாணவனின் சடலம், நேற்றே எலியட்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்டது.
- Oct 12, 2025 09:22 IST
மதுரையில் இன்று பிரசார பயணம் தொடங்கும் நயினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பா.ஜனதா சார்பில் மதுரையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம். இதையொட்டி ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன். வருகிற தேர்தலின் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கள் கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- Oct 12, 2025 09:01 IST
இன்று நடக்கிறது முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும் 809 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 2.36 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு எழுத விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 08:46 IST
தீபாவளி: விபத்துகளை தடுக்க 108 ஆம்புலன்ஸ்கள் தயார்
தீபாவளியை ஒட்டி விபத்துகளை தடுக்க 108 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 'காவல்துறை, தீயணைப்புத் துறையுடன் இணைந்து ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தீபாவளியை ஒட்டி முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிசை மற்றும் விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Oct 12, 2025 08:45 IST
ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகை காலமானார்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை டைனி கெர்டன் (வயது 79). தி காட்பாதர், தி காட்பாதர் பார்ட் 2, அனி ஹால், கிரைம்ஸ் ஆப் ஹார்ட், மென்ஹடன், சம்மர் கேம்ப் உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இதில், அனி ஹால், தி காட்பாதர் ஆகிய படங்களுக்காக டைனி கெர்டன் ஆஸ்கர் விருது வென்றுள்ளார். மேலும், பல்வேறு படங்களுக்காக சிறந்த நடிகைக்கான அகாடமி விருது, எமி விருது, கோல்டன் குளோம் விருது என பல்வேறு விருதுகளை டைனி கெர்டன் வாங்கியுள்ளார். உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டைனி கெர்டன் நேற்று காலமானார்.
- Oct 12, 2025 08:45 IST
6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர்ஆகிய 6 மாவட்டங்களில்இன்றுபோலியோசொட்டுமருந்துமுகாம்நடைபெறுகிறது. அரசுஆரம்பசுகாதாரநிலையங்கள், அரசுமருத்துவமனைகள்உள்ளிட்ட 7091 மையங்களில்நடைபெறும்இம்முகாமில் 7.88 லட்சம்குழந்தைகளுக்குபோலியோசொட்டுமருந்துவழங்கஇலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 08:00 IST
ஓசூர் அருகே அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் - 4 பேர் பலி
ஒசூர் அருகே பிக்கப் வேனுக்கும், சரக்கு லாரிக்கும் இடையே கார் சிக்கிய நிலையில், 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 பேரில் ஒருவர் குறித்து மட்டுமே அடையாளம் தெரிந்த நிலையில், மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Oct 12, 2025 07:59 IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 12, 2025 07:58 IST
அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின்மிஸ்ஸிஸிபிமாகாணத்தில்உள்ளகால்பந்துமைதானத்தில்மர்மநபர்நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் 4 பேர்உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர்சிகிச்சைக்காகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின்நிலைமைகவலைக்கிடமாகஉள்ளதால்உயிரிழந்தனர். எண்ணிக்கைஅதிகரிக்கலாம்எனபோலீசார்அச்சமடைந்தனர். மைதானத்தில்துப்பாக்கிச்சூடுநடத்தியமர்மநபரைபோலீசார்தேடிவருகின்றனர்.
- Oct 12, 2025 07:54 IST
தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
தீபாவளியைஒட்டிஅக்டோபர் 17 ஆம்தேதிசென்னையில்இருந்துபல்வேறுஊர்களுக்குச்செல்லும்ஆம்னிபேருந்துகளின்கட்டணம் 3 மடங்குஉயர்த்தப்பட்டுள்ளதால்பொதுமக்கள்அதிர்ச்சிஅடைந்தனர். சென்னையில்இருந்துநெல்லைசெல்லரூ.1800 ஆகஇருந்தகட்டணம்தற்போதுரூ.5000 ஆகவும்சென்னையில்இருந்துமதுரைசெல்லரூ.1100 ஆகஇருந்தகட்டணம்ரூ.4100 ஆகஉயர்ந்துள்ளது.
- Oct 12, 2025 07:47 IST
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான்மீதுபாகிஸ்தான்சமீபத்தில்நடத்தில்தாக்குதலுக்குபதிலடியாகபாகிஸ்தான்ராணுவநிலைகளைதலிபான்இஸ்லாமியஎமிரேட்படைகள்கைப்பற்றியதாகடோலோநியூஸ்தெரிவித்துள்ளது. டுராண்ட்எல்லைக்கோட்டின்குறுக்கே 2 பாகிஸ்தானியநிலைகள்தாக்கிஅழிக்கப்பட்டுள்ளதாகவும்இந்ததாக்குதலில் 12 பாக். வீரர்கள்கொல்லப்பட்டுள்ளதுடன்பலவீரர்கள்காயமடைந்ததாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 07:43 IST
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.