காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 595 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டம், சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 ச.மீ., நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாளுக்குள் தெரிவிக்கலாம். தங்கள் ஆட்சேபனையை விமான நிலைய திட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.
நிலம் குறித்து எழுத்து மூலமாக தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சிறுவள்ளூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“