புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்ட தமிழக அரசு

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN GOVT transfer 33 police officials sivaganga dist NEW SP R Shiva Prasad IPS Tamil News

நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா குறித்த  விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா தர விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

மேலும், ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும். சென்னை, புறநகர் பகுதிகளில் 29,187, மாநிலத்தின் பிற பகுதிகளில் 57,084 என மொத்தம் 86,271 பட்டாக்களை வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பட்டா தருவதை மாநில அளவில் செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: