தமிழ்நாட்டில் மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொழிந்து வருகிறது. கேரளாவில் பெய்த கனமழையால், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அம்மாநில அரசு நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“