Tamilnadu Government: திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி-யாக பணியாற்றி வந்த சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் எஸ்.பி-யாக பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும், திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதன்மை செயலாளர் பி. அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது பின்வருமாறு:-
1. ஆர். ஸ்ரீநிவாசப்பெருமாள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
2. பாகர்லா செபாஸ் கல்யாண், ஐபிஎஸ்., சென்னை தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பொருளாதார குற்றப்பிரிவு) இடமாற்றம்.
3. எஸ்.சக்திவேல், சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி.) இடமாற்றம்.
4. ஆர்.பாண்டியராஜன், கொளத்தூர் காவல் துணை ஆணையராக இடமாற்றம்.
5. டாக்டர் பி. சாமிநாதன், ஐபிஎஸ்., தென் சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு) இடமாற்றம்.
6. வி. சியாமளா தேவி, சென்னை காவல் கண்காணிப்பாளராக ( மத்திய புலனாய்வு பிரிவு, தடை குற்றப்பிரிவு) இடமாற்றம்.
7. வி. சரவண குமார், வட சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு) இடமாற்றம்.
8. அபிஷேக் குப்தா, ஐபிஎஸ்., திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
9. ரோகித் நாதன் ராஜகோபால், ஐபிஎஸ்., கோவை வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) இடமாற்றம்.
10. எம். ராஜராஜன், திருப்பூர் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) இடமாற்றம்.
11. ஜி.எஸ்.அனிதா, திருநெல்வேலி நகர காவல் துணை ஆணையராக (தலைமையகம்) இடமாற்றம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“