scorecardresearch

சென்னை, கோவையில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்கள் விற்பனை.. தமிழக அரசு உத்தரவு!

சிறுதானியங்களை பதப்படுத்துவதற்கும் மதிப்பு கூட்டுவதற்கும் வழிமுறைகளை வடிவமைக்க குழு உருவாக்கப்பட்டது.

ration shops
TN Govt orders to sale millets through ration shops in Chennai and Coimbatore

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, சென்னை மற்றும் கோவையில் உள்ள கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள்’ நுகர்வோருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

சிறுதானியங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க, மாநில அளவிலான குழுவை மாநில அரசு அமைத்தது.

இந்தக் குழுவின் தலைவராக கூட்டுறவு சங்கப் பதிவாளர் இருப்பார் என ஜனவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு / டிஎன்ஸ்டிசி-இன் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn govt orders to sale millets through ration shops in chennai and coimbatore