Advertisment

இந்து அறநிலையத் துறை கோயில்களின் சொத்துக்களை பணமாக்க தமிழக அரசு திட்டம்!

தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் சமய தன்னாட்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 38,652 இந்து மற்றும் சமண கோயில்கள் உள்ளன.

author-image
WebDesk
New Update
TN govt plan to monetise assets owned by religious institutions, HRCE Department, HRCE, Hidnu Temples, Hindu religious institutions, இந்து அறநிலையத் துறை, அறநிலையத் துறை கோயில்களின் சொத்துக்களை பணமாக்க தமிழக அரசு திட்டம், Hindu temples, Jain temples, HRCE plans

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை, திறம்படப் பயன்படுத்தி பணமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisment

சொத்துக்களை முன்மொழிவதற்கு வரைபடத்தை தயாரிப்பதற்கான ஏஜென்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

“இந்த சொத்துக்கள் உற்பத்தி ரீதியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. சொத்துக்களை உற்பத்தி பயன்பாட்டின் மூலம் பணமாக்குவதற்காக, கோயில்களின் நிதியுதவி அல்லது தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் திட்டங்களை மேற்கொள்ள துறை முடிவு செய்துள்ளது.” என்று ஒப்பந்த ஆவணம் கூறுகிறது.

தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் சமய தன்னாட்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 38,652 இந்து மற்றும் சமண கோயில்கள் உள்ளன.

இந்த கோயில்களுக்கு வணிக கட்டிடங்கள், வீடுகள், கூட்டு குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் சொந்தமாக உள்ளன. மேலும், இந்த நிலங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் அமைந்துள்ளன.

முன்மொழிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்துக்களின் உரிமை அந்தந்த கோயில்களால் தக்கவைக்கப்படும். அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மேம்பாட்டு உரிமைகள் தனியார் மேம்படுத்துபவர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. பணமாக்குதலின் மூலம் கிடைக்கும் வருமானம் அந்தந்த கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

சென்னை வேளச்சேரியில் உள்ள அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38,652 இந்து மற்றும் சமண மத கோயில்களின் சொத்துக்களை பணமாக்கும் செயல்முறைக்கான வரைபடத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க முன்மொழிந்துள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திற்கான பணியின் நோக்கம், கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் சொந்த நிதி அல்லது குத்தகை அல்லது பொது - தனியார் பங்களிப்பு முறை அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களின் கூட்டு பங்களிப்பு முறையில், உரிமையில் எந்த மாற்றமும் இல்லாமல் எடுக்கக்கூடிய பொருத்தமான செயல்பாடுகளை பரிந்துரைப்பது மற்றும் உரிய வளர்ச்சி மாதிரியை பரிந்துரைப்பது ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு இந்த ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையுடன் (பொது - தனியார் கூட்டு கொள்முதல்) விதிகள் 2012-க்கு இணங்க, ஒவ்வொரு வளர்ச்சி மாதிரிக்கும் ஒரு மாதிரி சலுகை ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் தயாரிக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Nhrc Notise
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment